மேஷம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.
ரிஷபம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மிதுனம்
சொன்ன சொல்லை நிறைவேற்றத் துடிப்புடன் செயல்படும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நேசித்தவர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.
துலாம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடிவடையும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
வசதிகள் பெருகும் நாள். எதிர் பார்த்ததை விட வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எளிதில் முடிக்க நினைத்த காரியம் இழுபறி நிலையில் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பச்சுமை கூடும். விரயம் அதிகரிக்கும்.
மகரம்
சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும்.
கும்பம்
யோகமான நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மீனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை வெற்றி பெறும்.