மேஷம்
முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த தனலாபம் வந்து சேரும்.
ரிஷபம்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பச்சுமை கூடும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.
மிதுனம்
பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வியாபார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைத் தொடர்பு கொள்வீர்கள்.
சிம்மம்
யோகமான நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபர விருத்திக்கு அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தி செய்யச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
கன்னி
உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவியைச் செய்து கொடுப்பர். நண்பர்கள் வாயிலாக நல்லதகவல் வந்து சேரும். உடன் பிறப்புகளின் பாசமழையில் நனைவீர்கள்.
துலாம்
உத்தியோக முயற்சி கைகூடும் நாள். ஊர் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உடல் நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு பிரச்சினைகளுக்கு முடிவெடுப்பது நல்லது.
விருச்சிகம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சிலரிடம் மனம் விட்டுப் பேசியதால் சிக்கல்கள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வளர்ச்சிகூட வழிபாடு கைகொடுக்கும்.
தனுசு
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் தேடி வரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.
மகரம்
உறவுகள் பலப்படும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை தீரும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
கும்பம்
நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும்.
மீனம்
வரவும் செலவும் சமமாகும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.