கப்பலில் இருந்து செலுத்தப்படும் ‘பிரமோஸ் சுப்பர்சோனிக்’ ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் ரஷ்யாவுடன் இணைந்து, பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
நிலம், கடல் மற்றும் வானில் இருந்து ஏவும் இந்த ஏவுகணைகள் முப்படைகளில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாகத் தாக்கி அழிக்கவல்ல, ஒலியை விட வேகமாக செல்லக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மேற்கு கடலோர பகுதியில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி கப்பலை வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளது.