மேஷம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள். பணியாளர்கள் தொல்லையுண்டு.
மிதுனம்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும்.
கடகம்
இல்லத்தில் நல்ல காரியம் நடை பெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்துச் சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
சிம்மம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பப்பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
பிறரை விமர்ச்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். ஊர்மாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
துலாம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகனப் பழுதுகளைச் சரி செய்யும் எண்ணம் உருவாகும்.
விருச்சிகம்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியத்தை முடித்துக்கொடுப்பர். புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத வரவு உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மகரம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கும்பம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.