ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு இந்தக் கடன்கள் தீர்வு வழங்குகின்றன.
எனினும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடன் வசதியாக பணம் வழங்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.