மேஷம்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கைமறதியாக வைத்த பொருளை தேடிக் கண்டுபிடிப்பீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
சுபவிரயம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றங்களைச் செய்ய நேரிடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
மிதுனம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். முன்னோர் சொத்துகளில் லாபம் கிட்டும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் தொடரும்.
சிம்மம்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
கன்னி
வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். விடிகாலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். தொழில் ரீதியாக விலகிச்சென்ற கூட்டாளிகள் விரும்பி வந்து சேருவர். உடல்நலம் சீராகும்.
துலாம்
உடன்பிறப்புகள் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
விருச்சிகம்
தொட்டது துலங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
தனுசு
முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உடன்பிறப்புகளின் வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரலாம். சான்றோர்களின் ஆலோசனை தக்க விதத்தில் கைகொடுக்கும்.
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிக்க இயலாது. தேக ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் செலவு அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.
மீனம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு பரிசீலனையில் இருக்கும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.