மேஷம்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
ரிஷபம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உத்தியோகத்தில் இருந்து விலகுவதா இல்லை நீடிப்பதா என்று சிந்திப்பீர்கள். அதிகம் செலவாகும் என நினைத்த காரியம் ஒன்று குறைந்த செலவில் முடியலாம்.
மிதுனம்
விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். தொழில் குறுக்கீடு அகலும்.
கடகம்
குடும்பச்சுமை கூடும் நாள். வரவேண்டிய தொகை வராமல் தாமதமாகும். எதிர்காலம் பற்றிய பயம் அதிகரிக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இடமாற்றம் இனிமை தரும்.
சிம்மம்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். குடும்ப முன்னேற்றம் கூடும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
கன்னி
முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்கள் வழிகாட்டுவர். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்
நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை பலன் தரும். ஆகாரக்கட்டுப்பாட்டால் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய வேண்டாம். தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. துணையாக இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது.
தனுசு
வருமானம் திருப்தி தரும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் எதிர்கால வாழ்விற்கு வழிவகுக்கும்.
மகரம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவலொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
கும்பம்
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. முன்பு பணிபுரிந்த இடத்திலிருந்தே மீண்டும் அழைப்பு வரலாம்.
மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வரும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கூடப்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.