மேஷம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
ரிஷபம்
புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். செய்யும் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். முயற்சி பலன் தரும்.
மிதுனம்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். சகோதர வழி சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள்.
கடகம்
யோகமான நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் லாபம் வந்து சேரும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.
சிம்மம்
செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்து சேரும். புதிய தொழிலுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
கன்னி
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். எதையும் யோசித்துச் செய்ய வேண்டுமென்று இல்லத்தினர்களிடம் எடுத்துரைப்பீர்கள். பயணம் பலன் தரும்.
துலாம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும். நீ்ண்ட நாட்களாக நிலவிய குடும்பப் பிரச்சினைக்கு நல்ல முடிவெடுப்பீர்கள்.
விருச்சிகம்
நன்மைகள் நடைபெறும் நாள். எதைச் செய்தாலும் தெளிவாகச் சிந்தித்துச் செய்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு.
தனுசு
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. கையில் கணிசமான தொகை வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
மகரம்
மகிழ்ச்சி அதிரிக்கும் நாள். மனக்குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்துச் சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் இனி ஒத்துவருவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
கும்பம்
குடும்ப முன்னேற்றம் உயர்வடைய வேண்டும் என்று நினைக்கும் நாள். உரிய நேரத்தில் பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும். தூரதேசத்திலிருந்து எதிர் பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவு வருவதில் தாமதம் ஏற்படும். உறவினர் பகை உருவாகலாம். நினைத்த நேரத்தில் காரியங்களை செய்ய இயலாது.