மேஷம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். வியாபாரம் தொழிலில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட வழக்குகள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரலாம். குடும்ப நலன் கருதிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.
மிதுனம்
மனக்குழப்பம் மாறும் நாள். தொழிலில் ஏற்பட்ட மறை முகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். பழைய கடன்களை அடைக்கப் புதிய வழி பிறக்கும்.
கடகம்
அதிரடியாக எடுத்த முடிவால் அனைவரும் ஆச்சரியப்படும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்தியோக நலன் கருதிப் பயணமொன்றை மேற் கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர். உடல் நலம் சீராகும். தந்தை வழி உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
விருச்சிகம்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
தனுசு
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். பணப்பற்றாக் குறை ஏற்படும். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணியாளர்களின் அனுசரிப்புக் குறையும். எதிரிகளால் இடையூறுகள் உருவாகும்.
மகரம்
மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். அரை குறையாக நின்ற சில வேலைகளை முடிக்க கொஞ்சம் பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது.
கும்பம்
வருமானம் திருப்தி தரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
மீனம்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். நினைத்தது நிறைவேறும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும்.