மேஷம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
ரிஷபம்
எண்ணங்கள் நிறைவேறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அக்கம் பக்கத்து வீட்டாரின் அனுகூலம் உண்டு.
கடகம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். வம்பு வழக்குகளை சமாளிப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். நட்பு பகையாகலாம். விரயங்கள் கூடும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
துலாம்
பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
விருச்சிகம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் உயரும்.
தனுசு
அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
மகரம்
வருமானம் இருமடங்காக உயரும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.
கும்பம்
செல்வாக்கு உயரும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.
மீனம்
சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.