மேஷம்
நினைத்தது நிறைவேறும் நாள். நேற்று செய்த முயற்சி இன்று வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. வெளியுலக தொடர்புகள் விரிவடையும். எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும்.
ரிஷபம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உடல் நலம் சீராகி உற்சா கப்படுத்தும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். அடுத்தவர்களின் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும்.
மிதுனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரும்.
கடகம்
செல்வாக்கு உயரும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி என்ன செய்யலாமென்று யோசிப்பீர்கள்.
கன்னி
மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கருத்து வேறுபாடுகள் அகலும்.
துலாம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் உருவாகலாம். கவனக் குறைவால் சில பொருட்கள் விரயமாகலாம். குடும்பச்சுமை கூடும்.
விருச்சிகம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் துணை புரிவர்.
தனுசு
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சொன்ன சொல்லை
நிறை வேற்றுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தியளிக்கும்.
மகரம்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கும்பம்
மனச்சோர்வு அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை.
மீனம்
நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். சகோதரர்களால் முன்னேற்றம் கூடும். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.