மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் எதிரே வந்த லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதனால் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது கறுவாக்கேணியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான து.விஜயநாதன் (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.