மேஷம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திடீர் பயணங்கள் லாபம் தருவதாக அமையும்.
ரிஷபம்
ஆனந்தமான வாழ்வமைய கந்தப்பெருமானை வழிபட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். முயற்சியில் தடை ஏற்படும். நண்பர்களாலும், உறவினர்களாலும் மனக்கசப்பு உருவாகலாம்.
மிதுனம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மகிழ்ச்சிக்குரிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பணம் தர வேண்டியவர்கள் வீடு தேடி வருவர். தேக ஆரோக்கியம் சீராகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்
வியாபார விரோதம் விலகும் நாள். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும் தொழில் வளர்ச்சி உண்டு. நேற்றுப் பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.
சிம்மம்
நம்பிக்கையோடு வேலவனை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தேக ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். மாமன், மைத்துனர் வழியில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
வளர்ச்சி கூட வள்ளிமணாளனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும்.
தனுசு
ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். செல்வாக்கு உயரும். உடன்பிறப்புகள் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வர்.
மகரம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்புகள் அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். பக்கத்து வீட்டாரின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மீனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆடை , ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.