சப்புகஸ்கந்த பகுதியில் பயணப்பையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள இடம்மொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெண்ணொருவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.