மேஷம்
ஆலய வழிபாட்டில் அக்கறை காட்டும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
ரிஷபம்
அதிகாலையிலேயே அனு கூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும். உடன்பிறப்புகள் உறுதுணைபுரிவர்.
மிதுனம்
சுபவிரயம் ஏற்படும் நாள். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
பெரிய மனிதர்களின் ஆசிபெற்று மகிழ்ச்சி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வாகனங்களை வாங்க திட்டம் தீட்டுவீர்கள்.
கன்னி
அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாகும். தொழில் தொடர்பாக வரும் தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டு.
துலாம்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு.
விருச்சிகம்
வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்ட நண்பர்கள் உறுதுணை புரிவர். பொருளாதார நலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மகரம்
காரிய வெற்றிக்கு கண்ணபிரானை வழிபட வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
கும்பம்
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பணிகளில் இருந்த தாமதம் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
மீனம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும்.