இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (03.11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி ஒரு கிலோவை 100 ரூபாவிற்கு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்