மேஷம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். வரன்கள் வீடு தேடி வரும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
ரிஷபம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் வியப்படையச் செய்யும்.
மிதுனம்
கடன் சுமை குறையும் நாள். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும். தொழில் மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு.
கடகம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறும்.
சிம்மம்
அலைபேசி வழியே அனுகூலமான தகவல் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருங்கால நலன் கருதிச் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி
நட்பு வட்டம் விரிவடையும் நாள். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.
துலாம்
யோகமான நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோக ரீதியாக அழைப்புகள் வரலாம்.
விருச்சிகம்
பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பேச்சு வார்த்தை நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். மூடிக்கிடந்த தொழில் திறப்பு விழாச் செய்யும் முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. சொந்த பந்தங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
மகரம்
தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உருவாகும்.
மீனம்
மனக்குழப்பங்கள் அகலும் நாள். அன்னிய இனத்தாரால் ஆதாயம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணி தொடரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உங்களின் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும்.