தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரையும்,
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2022 மே 23 ஆம் திகதி முதல் 2022 ஜூன் முதலாம் திகதி வரை நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.