வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் இன்று (11.02) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கமைப்பில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு முதற்கட்ட நிதி மட்டுமே பெற்ற நிலையில் வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யமுடியாமல் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் “அரசே எம்மை வாழ விடு இல்லை வழியை விடு”, “அரசே எமது வீட்டுத் திட்ட நிதியை தா” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.