மேஷம்
தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி கூடும் நாள். தொலை தூரப் பயண வாய்ப்புகள் வரலாம். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.
ரிஷபம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் வரலாம். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும்.
மிதுனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.
சிம்மம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கன்னி
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
துலாம்
செல்வ நிலை உயரும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களைத் தீட்ட நண்பர்கள் உறுதுணை புரிவர். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.
தனுசு
பொன்னான நாள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் அதிக வருமானம் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும்.
மகரம்
விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். திருமணத்தடை அகலும். எப்படி நடக்கு மென்று நினைத்த காரியம் நல்ல விதமாக முடிவடையும். சிலர் தொழில் ரீதியாக உதவியை நாடி வரலாம்.
கும்பம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பிரியமானவர்களிடம் கூட யோசித்துப் பேசுவது நல்லது. மறதியால் சில தொல்லைகள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் வந்து சேரும்.
மீனம்
கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். வரவும் செலவும் சமமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வாகனப் பழுதுகள் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.