மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடமாற்றம் அல்லது வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.
ரிஷபம்
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர்மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக்குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பில் சிறிது கரையலாம்.
சிம்மம்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் பணத்தேவை பூர்த்தியாகும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும்.
கன்னி
நிகழ்காலத் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடை பெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
துலாம்
இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும். செய்தொழிலில் சிறப்புகள் கூடும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.
விருச்சிகம்
செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் கூடலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தனுசு
நட்பால் நன்மை கிட்டும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். சுபவிரயம் உண்டு.
மகரம்
யோகங்கள் வந்துசேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது, விரயங்கள் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை .
கும்பம்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய எண்ணத்தை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரயத்திற்கேற்ப வரவு உண்டு. காரியங்களை எளிதில் செய்து முடிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.