இத்தாவில் பளை பகுதியில் அமைந்துள்ள உறவினர் ஒருவரது வீடொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த ஆறுமுகம் ஞானக்குமார் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் (28) தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.