மேஷம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை உயரும். நல்ல தகவல்கள் வீடு தேடிவரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
நம்பிக்கைகள் நடைபெறும்நாள். வருமானம் இரட்டிப்பாகும். வாக்குக்கொடுத்ததை நிறைவேற்றுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பயணம் பலன் தரும்.
மிதுனம்
எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும் நாள். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.
கடகம்
வரவைக்காட்டிலும் செலவு கூடும் நாள். பொதுவாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும். நாடாளும் நபர்களால் நன்மை வந்து சேரும். நண்பர்களுடன் பேசும்பொழுது வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
புகழ் கூடும் நாள். பொதுப்பிரச்சினைகளில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.
கன்னி
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உத்தியோக முயற்சி கைகூடும். சுபச்செய்திகள் வந்து சேரும். துணையாக இருப்பவர்களால் தொல்லை ஏற்பட்டு அகலும். கடன் சுமை குறையும். வரவு திருப்தி தரும்.
துலாம்
எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடமாற்றச்சிந்தனை மேலோங்கும். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல்- கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை .
விருச்சிகம்
விடியும்பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். நேற்று நடை பெறாத காரியம் இன்று நடைபெறும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
தனுசு
செய்யும் முயற்சிகளில் சிறுதடைகள் ஏற்படும் நாள். புதிய நண்பர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். உடல் நலனில் கவனம் தேவை .
மகரம்
பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடை பெறும் நாள். கொடுத்த வாக்கைக்காப்பாற்ற எடுத்த முயற்சி பலன் தரும். செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் மகிழ்ச்சி ஏற்படும்.
கும்பம்
பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுவர். நினைத்தது நிறைவேறும்.
மீனம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கத்து வீட்டாரின் பகைமாறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் ஒரு தொகை வந்து சேரும். தாயின் உடல்நலம் சீராகும். கல்யாணக்கனவுகள் நனவாகும்.