முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றுமொருவரை காயப்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஜில்’ எனப்படும் பொன்னம்பெரும ஆராச்சிகே டொன் தனுஷ் புத்திக (வயது 30) என்பவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடியுள்ளதாகவும் துல்லியமான தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபாயை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தெல்கஹவத்த பிரதேசத்தில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த இனந்தெரியாத நபரால் நேற்று (26) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பாதாள உலகக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.