அமெரிக்க கடலோரக் காவல்படையின் சேவையில் இருந்து நீக்கப்பட்ட, டக்ளஸ் முன்ட்ரோ (douglas munro) என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலை இலங்கை கடற்படையினர் பெறுப்பேற்றுள்ளனர்
இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, டற்படையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வொசிங்டனில் உள்ள, சியாட்டிலில் (seattle) இலங்கை கடற்படை அதிகாரிகளிடம், அமெரிக்க கடலோரக் காவல்படை அதிகாரிகளால் இந்தப் போர்க்கப்பல் கையளிக்கப்படவுள்ளது.
அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து, இலங்கை கடற்படை பெற்றுக் கொள்ளும் மூன்றாவது போர்க்கப்பல் இதுவாகும்.
சியாட்டிலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு தற்போது இந்தப் போர்க்கப்பலில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு கப்டன் லங்கா திசாநாயக்க தலைமையில், கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தப் போர்க்கப்பலில் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இதனை பரிமாற்றம் செய்வது தொடர்பான உடன்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சோதனை ஓட்டத்துக்கு கப்பல் தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.