இலங்கை பொன்சாய் சம்மேளனத்தின் தலைவர் தில்ருக்ஷி மார்டென்ஸ்டைனுக்கு வெளி விவகார அமைச்சரின் கௌரவிப்பு விருது வழங்கப்பட்டது. 2021 ஒக்டோபர் 22 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இந்த கௌரவிப்பு விருதை தில்ருக்ஷிக்கு வழங்கியிருந்தார்.
இலங்கை மக்கள் மத்தியில் மூன்று தசாப்த காலப்பகுதிக்கு அதிகமாக பொன்சாய் கலையை ஊக்குவிப்பதில் மார்டென்ஸைடன் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியிருந்தார். 1988 ஆம் ஆண்டு பொன்சாய் பயிற்சி பெற ஆரம்பித்ததுடன், அதனைத் தொடர்ந்து, ஸ்தாபக அங்கத்தவராக இலங்கை பொன்சாய் சம்மேளனத்தை நிறுவ பங்களிப்பு வழங்கியிருந்தார்.
இரு நாடுகளையும் சேர்ந்த மக்களின் உள்ளங்களை கலையினூடாக ஒன்றிணைக்கச் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், அதற்காக பொன்சாய் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் ஜப்பானிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்பானிய கலாசார விற்பனை சந்தைகளிலும் பங்கேற்றிருந்தார். கடந்த காலங்களில் தமது அறிவையும், அனுபவத்தையும் இலங்கை மக்களுக்கு பரவச் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
பொன்சாய் கலையில் மாத்திரமன்றி, இகேபனா கலையிலும் மார்டெஸ்டைன் திறமை பெற்றிருந்தார். இலங்கை ஷி-என் இகேபனா மற்றும் மலர் கலை சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவராகவும் இவர் திகழ்ந்தார். பல வருட காலமாக இந்த புகழ்பெற்ற சம்மேளனங்களின் தலைவராகவும், செயலாளராகவும் இவர் திகழ்ந்தார். இலங்கை ஜப்பான் நட்புறவு சங்கத்தின் அங்கத்தவராகவும் திகழும் மார்டெஸ்டைன், இரு நாடுகளுக்குமிடையே நட்புறவை வலிமை பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டில் 70 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது.
தமது நாட்டுக்கும், ஜப்பானுக்குமிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கைகோர்ப்பு, தகவல் மற்றும் கலாசார செயற்பாடுகள் மற்றும் சர்வதேச உறவுகளை மேம்படுத்த உதவும் இதர நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக, பரஸ்பர புரிந்துணர்வு, நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை வெளி விவகார அமைச்சரின் கௌரவிப்பு விருது என்பது வருடாந்தம் முன்னெடுக்கப்படுகின்றது.