கோடிஸ்வரரும், முதன்மை நிலை வர்த்தகருமான தம்பிக்க பெரேராவின் நன்கொடையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் இரண்டு பாடசாலைகள் ஒரே நேரத்தில் டிஜிட்டல் வகுப்படைகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
யாழ்.மகாஜனாக் கல்லூரி, யாழ்.யூனியன் கல்லூரி ஆகியனவே இவ்வாறு டிஜிட்டல் வகுப்பறைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனவாகும்.
இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் முதன் முதலாக கோடிஸ்வரரும், முதன்மை நிலை வர்த்தகருமான தம்பிக்க பெரேராவின் நன்கொடையினைப் பெற்ற இரு பாடசாலைகள் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளன.
டிஜிட்டல் உபரகங்களை வழங்கும் இருவேறு நிகழ்வுகளும் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

மகாஜனாக் கல்லூரியின் அதிபர் எம்.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டு டிஜிட்டல் வகுப்பறைக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொண்டர்.
மகாஜனாக் கல்லூரியில் 2904 மாணவர்கள் கல்வி கற்பதோடு அங்கு 166 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று யூனியன் கல்லூரியின் அதிபர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இக்கல்லூரியில் 825 மாணவர்கள் கல்வி கற்பதோடு 61ஆசிரியர்கள் கடமையற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.