வியாழக்கிழமை 21 ஜூலை 2021 ஐப்பசி 04
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் அஸ்வினி மாலை 5.09 வரை பிறகு பரணி
திதி தேய்பிறை பிரதமை
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் கன்னி
மேஷம்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
நேசித்தவர்கள் மூலம் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பப் பிரச்சினை தீரும்.
மிதுனம்
கனவுகள் நனவாகும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல விதம் கிடைக்கும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிணக்குகள் அகலும்.
கடகம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். கைமாத்தாகக் கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை யொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
பிள்ளைகள் வழியில் பெருமைகள் கூடும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு. நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும்.
கன்னி
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்
செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
யோகமான நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
தனுசு
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். சவால்களைச் சாமர்த்தியமாகச்
சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.
கும்பம்
குதூகலம் கூடும் நாள். செவிகுளிரும் செய்திகள் மாலை நேரத்திலேயே வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். அன்னிய தேசத்தலிருந்து நல்ல தகவல் வரலாம்.
மீனம்
மகிழ்ச்சியான நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள்
வந்து சேரும். வீடு கட்டும் பணிக்கு வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள். மாலைப் பயணம் மகிழ்ச்சி தரும்.