திங்கட்கிழமை 18 ஜூலை 2021 ஐப்பசி 01 தமிழ் மாத பிறப்பு, சோமவர பிரதோஷம்
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் பகல் 12.52 வரை பூரட்டாதி. பிறகு உத்திரட்டாதி
திதி வளர்பிறை திரோதசி
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் சிம்மம்
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
ஆலய வழிபாட்டில் அமைதி காண வேண்டிய நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பர்.
மிதுனம்
பாக்கிகள் வசூலாகும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாகும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
கடகம்
அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறை வேறும். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். தெய் வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் குறைவாகவே இருக்கும். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களி்ன் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். திருமண வாய்ப்புக் கைகூடும்.
துலாம்
விரயங்கள் கூடும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
விருச்சிகம்
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
தனுசு
கடமை உணர்வோடு செயல்படும் நாள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கரை காட்டுவீர்கள். தொழில் பங்குதரார்களோடு இருந்த பகை மாறும்.
மகரம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். இல்லத்தில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்
மன நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி காணும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர் . புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்பு நடை பெறுவதில் தாமதம் ஏற்படும்.