அனுராதபுரம் திசாவெவையிலுள்ள இராணுவ சேவை படையணி கல்லூரிக்கு வருகை தந்திருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் விஜயம் செய்திருந்த போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
கல்லூரி நுழைவு வளாகத்திற்கு வருகைத் தந்த தளபதிக்கு கல்லூரியின் தளபதி கேணல் மொஹான் பிரேமரத்ன மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதோடு மலைநாட்டு பாரம்பரித்துடன் கூடிய “வெஸ்” நடனக் கலைஞர்களால் சிறப்பு நடன விருந்தும் அளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் இந்திய தளபதி எண்ணங்களை பதிவிட்ட பின்னர் அவருக்கான நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவை எட்டின.
இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்களும் கலந்துகொண்டனர். இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவன இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.