ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதுவரை மீனவர் அமைப்புகளுடன் எந்த தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
போராட்டம் இடம் பெறவுள்ள போராட்டம் அவரது தனிப்பட்ட நோக்கங்களுக்கானது. கடல்வழியாக நடத்தப்படவுள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. பல்வேறு வடிவங்களில் அவர் போராட்டங்களை செய்யலாம். அது அவருடைய அரசியலுக்கானது.
எங்களுடைய கடற்தொழில் சங்கங்களை அணுகியே போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் எந்த அரசியல்வாதிகளையும் வெறுக்கவில்லை. எங்களோடு கலந்தாலோசித்தே போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் 117 கடற்தொழிலாளர் சங்கங்களும், 11 சமாசங்களும், சம்மேளனமும் இருக்கின்ற போதும் இந்த பிரச்சினை தொடர்பில் அவர் எவருடனும் உரையாடவில்லை. மீனவர்களுடைய பிரச்சினையை ஒருபோதும் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். மீனவர் பிரச்சினையை மீனவர்களுடன் சேர்ந்தே அணுக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.