பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் (69) கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் தனது தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மீது பல முறை கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு எசெக்ஸ், லீ-ஆன்-சீவில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்தது. மதியம் 12:05 மணியளவில் தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதேவேளை, தாக்குதல் நடத்தப்பட்டு 2 மணித்தியாலங்கள் வரை அமேஸின் உடல் அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.