யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10வது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதி கிரியைகள் இன்று நல்லூரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றிருக்கின்றது.
மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) காலை இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.