சனிக்கிழமை 09 ஜூலை 2021 புரட்டாதி 23 சதுர்த்தி விரதம்
நல்ல நேரம் 10:30 AM – 12:00 Noon
நட்சத்திரம் விசாகம்
திதி வளர்பிறை திரிதியை காலை 11.27 மணி வரை சதுர்த்தி
இராகுகாலம் 09:00 AM – 10:30 AM
எமகண்டம் 01:30 PM – 03:00 PM
குளிகை 06:00 AM – 07:30 AM
சந்திராஷ்டமம் மீனம் மாலை 3.35 வரை பிறகு மேஷம்
மேஷம்
பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களால் விரயம் உண்டு. திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றம் உருவாகலாம். நட்பு பகையாகலாம்.
ரிஷபம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
மிதுனம்
அத்தியாவசிப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். வரவு திருப்தி தரும். வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
கடகம்
பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிக்கலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
சிம்மம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். இல்லத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும்.
கன்னி
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளின் உதவி உண்டு. வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் உயரும்.
தனுசு
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பிள்ளைகளால் உருவான கவலை தீர்ந்து நிம்மதி பெறுவீர்கள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
மகரம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.
கும்பம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். பிள்ளைகளுக்காக எடுத்த முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சந்திக்கும் நண்பர்களிடம் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்த்தால் வளர்ச்சி கூடும். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.