முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்று (04) இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விஷேட தேவையுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வட மாகாணத்திலும் அண்மையில் பைசர் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.
சுகாதாரத் துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுத்து வந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இராணுவத்தினர் விசேட தேவையுடையவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.