யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிப பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடக்க முயற்சித்த 65 வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் மீதே பேருந்து மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வயோதிப பெண் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.