சனிக்கிழமை 02 ஜூலை 2021 புரட்டாதி 22 ஏகாதசி விரதம், கரி நாள்
நல்ல நேரம் 10:30 AM – 12:00 Noon
நட்சத்திரம் ஆயில்யம்
திதி தேய்பிறை ஏகாதசி
இராகுகாலம் 09:00 AM – 10:30 AM
எமகண்டம் 01:30 PM – 03:00 PM
குளிகை 06:00 AM – 07:30 AM
சந்திராஷ்டமம் தனுசு
மேஷம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கை கூடும். உறவினர்கள் பகை அகலும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கடகம்
மங்கலச் செய்திகள் மனை தேடிவந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். நூதனப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
அடிப்படை வசதிகளைப்பெருக்கிக் கொள்ளும் நாள். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியங்களை இன்று செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் வந்து சேரலாம்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.
துலாம்
சச்சரவுகள் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம்
வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
தனுசு
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். இதைச்செய்வோமா, அதைச் செய்வோமா என்று குழம்புவீர்கள். புதிய முயற்சிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
மகரம்
வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும் நாள். குடும்ப பொறுப்புகள் கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வருமான பற்றாக்குறை அகலும்.
கும்பம்
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு கிடைக்கும். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உற்றார், உறவினர்களின் சந்திப்பு உயர்விற்கு வழிகாட்டும். பிள்ளைகளால் விரயம் உண்டு.