மதகுருமார்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசுவதை கட்டுப்படுத்துவதுடன், அவர்களுக்கு அனுசரணை வழங்குவதிலிருந்து அரசாங்கம் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான சந்திப்பு (28/09) அக்கட்சியின் தலைமையகமான தாருஸலாத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, பயரங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி சட்டத்தரணி ஹியாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இந்தச் சட்டத்தினை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுவதோடு பால்நிலை, வயது வேறுபாடு இன்றி சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி நாட்டின் கருத்துச் சுதந்திரம் நசுக்கபடுவதோடு ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முடக்கப்படுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துரைத்துள்ளது.