திங்கட்கிழமை 28 ஜூலை 2021 புரட்டாதி 11
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் ரோகிணி மாலை 5.23 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்
திதி 2.30 மணி வரை தேய்பிறை சஷ்டி. பிறகு சப்தமி
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் துலாம்
மேஷம்
பணவரவு திருப்தி தரும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளின் உறுதுணையால்,முயற்சியில் வெற்றி கிடைக்கும்.கல்யாணக் கனவுகள் நனவாகும்.
ரிஷபம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். செய்தொழிலில் உயர்வு கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். குடும்பத்தினர் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும். திருமண முயற்சிகள் கைகூடும்.
கடகம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
சிம்மம்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பாராட்டும், புகழும் கூடும். எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
கன்னி
யோகமான நாள். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தனவரவு திருப்தி தரும். தாய்வழி ஆதரவு உண்டு.
துலாம்
விமர்சனங்களால் உறவில் விரிசல் ஏற்படும் நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டாளிகளால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். வாகனத்தால் தொல்லையுண்டு.
விருச்சிகம்
நல்ல செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பற்றாக்குறை அகலும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
கும்பம்
விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். பாதியில் நின்ற பணிகளை உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.
மீனம்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.