வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதியை சந்திப்பதற்காகவே அவசர அவசரமாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதாக கொழும்பில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
அவசரமாக நாடு திரும்பிய பசில் ராஜபக்ச தொடர்பாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த பசிலின் திடீர் வருகையின் இரகசியம் என்ன? என்பது பலருக்கும் ஒரு கேள்வியாக உள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதியை சந்திப்பதற்காகவே அவர் வருகை வந்ததாக தெரிய வருகின்றது. பசில் ராஜபக்சவைத் தவிர, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரமே அவர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், அவர் யார்? எந்த நோக்கத்திற்காக? என்ன விவாதிக்கப்பட்டது? இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பசில் ராஜபக்சவின் திடீர் வருகையின் காரணங்கள் இந்த வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதி மிகவும் முக்கியமான நபராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.