ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021 – ஆனி 6
நல்ல நேரம் காலை: 11:00AM – 12:00PM
பகல்: 2:00PM – 3:00PM
இராகுகாலம் காலை: 4:30AM – 6:00AM
இரவு: 7:30PM – 9:00PM
குளிகை மாலை 3:00PM 4:30PM
இரவு 9:00PM 10:30PM
எமகண்டம் பகல்: 12:00PM – 1:30PM
இரவு: 6:00PM – 7:30PM
திதி தசமி, பகல் 12:46PM
நட்சத்திரம் சித்திரை, மாலை 3:47PM
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி,ரேவதி.
மேஷம்
பாசத்தோடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும் நாள். இடமாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர்.
ரிஷபம்
புதியபாதை புலப்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.
மிதுனம்
எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் நாள்.வியாபாரப்போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்
குடும்பப் பொறுப்புகள் கூடும் நாள். மனஅமைதிக்காக வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை .
சிம்மம்
நீண்ட நாளைய எண்ணம் நிறை வேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியதோடு தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.
கன்னி
கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். காலை நேரம் கலகலப்பாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
விருச்சிகம்
வரவு திருப்தி தரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
எதிரிகள் விலகும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றுச்சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.
மகரம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகள் அகலும்.
கும்பம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.
மீனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர ஆதாயம் கிடைக்காது.