சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிங்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்நாட்டு விலங்குகளுக்கு இடையே கொவிட் தொற்று பரவுகின்றமை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், தொற்றுக்கு உள்ளான சிங்கம் மற்றும் மூன்று குட்டிகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.