யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் – பண்டத்திரிப்பு பகுதிகளில் கொரோனா விதிகளை மீறி இடம்பெற்ற திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பதின்மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதி மீறி நடந்த திருமண நிகழ்வு குறித்து சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.
திருமண நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 78 பேருக்கு பி.சி. ஆர். சோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாப்பிள்ளை – மணமகள் வீட்டார்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தபடுத்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வவுனியாவிலும், விதி மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இதேபோன்று அகப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.