தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பி.சி.ஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து சிங்கக்கூட்டுக்கு அருகில் பராமரிப்பாளர்களாக இருந்த மூவர் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, சிங்கமொன்று சுகயீனமுற்றிருப்பது உண்மைதான். மிருகங்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவு உரிய தகவலை தராத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே, இவ்விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மிருக்ககாட்சி சாலையின் பணிப்பாளர் குழுவுக்கு கட்டளையிட்டுள்ளேன்.” – என்றார்.