கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.
நேற்றைய தினம் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்திருந்தது.
எவ்வாறாயினும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.