முல்லைத்தீவு – இரணைப்பாலை பகுதியில் நேற்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 66 வயதுடைய பெண்ணொருவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காணியில் இருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் வசித்துவரும் இந்திரன் மரியரெத்திணம் (வயது-66) எனும் வயோதிபப் பெண்ணே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.