அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இரு தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை பலதரப்பினரின் அவதானத்தை பெற்றுள்ளது.
ஆயுத கட்டுப்பாடு, பொருளாதார தடைகள் மற்றும் ரஷ்யாவின் இணைய வழி தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஜி-7 மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களை சந்தித்த பின்னர் ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்துள்ளார். மென்பொருள் ஊடுருவல், இணையத் தாக்குதல், தேர்தல் தலையீடு உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி புட்டினிடம் அதிபர் பைடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.