சஷ்டி விரதம், முகூர்த்தநாள்.
இரவு: 12:00AM – 1:30AM
இரவு 3:00AM 4:30AM
இரவு: 12:00AM – 1:30AM
திதி சஷ்டி, இரவு 7:38PM
மேஷம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும் நாள். அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம்
மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் வெற்றிகிட்டும். சேமிப்பு உயரும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்துசேருவர்.
சிம்மம்
சந்தோஷங்கள் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். வரவு திருப்தி தரும்.
கன்னி
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்பப் பொறுப்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
துலாம்
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றிகிட்டும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்தலாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஒரு சில உபத்திரவங்கள் ஏற்படலாம்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தை விடச் செலவு அதிகரிக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
யோகமான நாள். கூட்டுத் தொழிலைத் தனித் தொழிலாக்கும் முயற்சி பலன் தரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும். பொது வாழ்வில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.