எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ. கொன்சோடியம் லங்கா நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் அலட்சியமாக செயற்பட்டமை தொடர்பில் இனங்காணப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.