நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இவை இந்திய மருத்துவக் கழிவுகளா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வெற்று ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.